Initiated, Coordinated and Conducted by
Tr.KarthickRaja, Cuddalore District since November 2020.
with the support of Volunteer Govt Teachers TEAM.
Initiated, Coordinated and Conducted by
Tr.KarthickRaja, Cuddalore District since November 2020.
with the support of Volunteer Govt Teachers TEAM.
பகுதிகள் [Name of Programs]
மாணவர்களுக்கான செயல்பாடுகள்
மின்மினிகள் மின்னும் நேரம் / Shining Stars Program - பாடப்பொருளை வலுப்படுத்துவதற்காகவும், மாணவர்களின் தன்னார்வ ஈடுபாட்டை ஊக்கபடுத்துவதற்காகவும், பாடக்கருத்துகளை மாணவர்களிடம் குரல் பதிவு செய்து அனுப்பும் பகுதி இது....
மேலும் தகவல் பெற இங்கே கிளிக் செய்யவும்- More Info - Click Here
Join Whatsapp Group for More Info - ClickHere
சிறப்பு பகுதி / Super Stars Program - தற்போது July 15 Event 2025 - கல்வி வளர்ச்சி நாள் மாணவர்களுக்கான தன்னார்வ செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது- [சிறப்பு தினங்கள் & தேசிய விழாக்களை போற்றும் வகையில் மாணவர்களை தன்னார்வமாக பங்கேற்கச் செய்து Audio பதிவு செய்து அனுப்பும் பகுதி இது] ....
மேலும் தகவல் பெற இங்கே கிளிக் செய்யவும்- More Info - Click Here
Join Whatsapp Group for More Info - ClickHere
புத்தகத் தேனீக்கள் / Book Bees Program - மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாசிப்பு இயக்கம் புத்தகம், புத்தகப்பூங்கொத்துகள், நூலகப்புத்தகங்கள், தேன்சிட்டு இதழ், ஊஞ்சல் இதழ் போன்ற பள்ளிக்கல்வித் துறை சார்பான புத்தகம், நூல்கள், இதழ்கள் போன்றவற்றிலுள்ள பகுதிகளை வாசிக்க செய்து, அவர்களை தன்னார்வமாக பங்கேற்க வழிகாட்டி, அவர்களின் குரல் பதிவு செய்து அனுப்பும் பகுதி இது...
மேலும் தகவல் பெற இங்கே கிளிக் செய்யவும்- More Info - Click Here
Join Whatsapp Group for More Info - ClickHere
நோக்கம் [Objectives]
தான் கற்றதை வெளிப்படுத்துவதன் மூலம் கற்றல் வலுப்படுகிறது,
மேலும் பலவற்றை கற்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்குகிறது என்ற அடிப்படையிலும்
குறிப்பாக குரல் பதிவு / Audioவாக பதிவு செய்தல்
என்ற எளிய செயல்பாட்டால்
பேச்சாற்றல், வாசிப்புத் திறன் மேம்படுகிறது என்ற வகையிலும்
இந்த தொழில்நுட்பம் முன்னெடுக்கப்படுகிறது.
மெல்ல மலரும் மாணவர்களையும் பங்கேற்கசெய்தல்.
பயன்கள் [Benefits]
மாணவர்கள் குரல்களை பதிவு செய்வதால் அவர்களிடம் ஆர்வம் ஏற்பட்டு தன்னார்வமாக பங்கேற்கின்றனர். [கற்றலில் இனிமை, கற்பித்தலில் புதுமை]
மாணவர்களின் குரல் பதிவுகளை இணைய பக்கத்தில் பதிவேற்றி வைப்பதன் மூலம் கல்வி அலுவலர்களும், பெற்றோர்களும் எங்கிருந்தும், எப்போதும் கேட்கலாம். மாணவர்களின் வாசித்தல் திறனின் நிலை மேம்பாட்டினை அறியலாம். [ஆவணம்]
மாணவர்கள் தனது குரல்களை தானே கேட்கும் போது மனமகிழ்ச்சி அடைவர். மேலும் தனது பேச்சில் உள்ள கருத்து பிழையை அடையாளம் காண்கின்றனர். [சுயமதிப்பீடு]
தேவைப்படின் பார்த்தே வாசித்து குரல் பதிவு மேற்கொள்ளலாம் என்று வழிகாட்டுவதால் மெல்ல மலரும் மாணவர்களும் தன்னார்வமாக பங்கேற்கின்றனர்.
பல நிகழ்ச்சிகள் / பகுதிகள் மேற்கொள்வதால் பல புத்தகங்கள் / கருத்துகள் / தகவல்களை தேடிக்கற்கின்றனர்.
குரல் பதிவு எளிமையான செயல்பாடு என்பதால் பெற்றோரின் பங்கேற்பும், ஒத்துழைப்பும் சாத்தியமாகிறது.
வழிமுறைகள் [Instructions] [One time Registration]
தனது மாணவர்களை / பிள்ளைகளை அவர்களின் தன்னார்வத்துடன் பங்கேற்க செய்வதற்கு விரும்பும்
வழிகாட்டும் நபர்கள் முதலில் தங்களையும் ,
தன்னார்வமாக பங்கேற்வுள்ள தனது மாணவர்கள் / பிள்ளைகளின்
தகவல்களை பதிவு செய்துகொள்வது முக்கியமானது..
இதுவரை பதிவு செய்யவில்லை எனில்
வழிமுறைகள் [Instructions]
குரல் பதிவுகளை மேற்கொள்வதற்கான வழிமுறைகள்
மாணவர்களை கட்டாயப்படுத்தாது, அவர்களை தன்னார்வமாக பங்கேற்க மட்டுமே வழிகாட்டப்படுகிறது.
ஆசிரியர்கள் / பெற்றோர்களின் ஒத்துழைப்பு , கண்காணிப்பு அவசியம்.
மாணவர்கள் Audio பதிவு செய்ய விரும்புவதை திட்டமிட்டுக்கொண்டு முதலில் அனைத்தையும் எழுதிபார்க்க அறிவுறுத்தப்படுகிறது.
எழுதியதை பேசிப் பயிற்சி எடுத்துக்கொள்ளவும். பிறகு Audioகளை பதிவுசெய்வதற்கும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். [பார்த்தோ, பார்க்காமலோ பேசலாம்]
நிறுத்தி, நிதானமாக மற்றவர்கள் கேட்டுப் புரிந்துகொள்ளும் வகையில் குரல் ஏற்றத்தாழ்வுகளோடு [வெளிப்புறச் சத்தங்கள் இல்லாச் சூழ்நிலையில்] Audioகளை பதிவுசெய்ய கூறப்படுகிறார்கள்.
மாணவர்கள் ஒவ்வொரு Audio-வின் தொடக்கத்திலும் வணக்கம் என்று ஆரம்பித்து அதனைத் தொடர்ந்து மாணவர் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர் , ஒன்றியம் , மாவட்டம் போன்றவற்றைக் கூற செய்து, பின்பு “எனது குரல் இணையவழிக் கல்விவானொலி Online Kalviradio www.kalviradio.com ல் வெளிவருவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூற செய்யவும். பின் தனது தலைப்பினை பற்றிப் பேசவும்.
இறுதியாக நன்றி கூறி நிறைவு செய்வதற்கும் வழிகாட்டப்படுகிறார்கள்
இவ்வாறு மாணவர்கள் தன்னார்வமாக பேசிய ஆடியோக்களை வழிகாட்டி ஆசிரியரோ அல்லது தலைமை ஆசிரியரோ ஓரிரு முறை கேட்டுப் பார்த்து பின்பு மிகச் சரியானதை மட்டுமே நம் இணையவழி கல்விவானொலி குழு கூறுகின்ற வழிமுறைப்படி அனுப்பவேண்டும்.
சொந்தவேகத்தில் கற்கும் மாணவர்களுக்கு ஏற்ப அவர்களுக்கான பேசவேண்டிய பகுதியை குறைத்தும், தேவைப்படின் அதையும் பார்த்தே படிக்கவைத்தும், இன்னும் எளிமையாக ஆசிரியர் சொல்லசொல்ல கூடவே பின்தொடரசெய்தும் அல்லது அவர்களால் என்ன செய்ய இயலுமோ அதனை Audio பதிவு செய்து அனுப்பலாம்.
வழிமுறைகள் [குரல்பதிவுகளை பதிவேற்றி வைக்கவும்]
Online KalviRadio Team -ன் தன்னார்வ செயல்பாடுகளில் தனது மாணவர்களை / பிள்ளைகளை தன்னார்வமாக பங்கேற்க செய்து பதிவு செய்த குரல்பதிவுகளை
தலைமைஆசிரியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், பெற்றோர்கள் என அனைவரும்
தங்களின் Google Drive ல் அந்தந்த program பெயரில் Folder உருவாக்கி
பதிவேற்றி வைக்கவும்.
Google Drive ல் Folder எவ்வாறு உருவாக்குவது?
அந்த Folder குள் Audio & மற்ற படைப்புகளை எப்படி பதிவேற்றுவது?
அந்த Folder யை எப்படி KR Teamக்கு பகிர்வது?
போன்றவற்றிற்கான காட்சி படங்களுடன் விளக்கம்கொண்ட PDF கீழே உள்ளது.
👇👇👇👇👇👇👇
https://drive.google.com/drive/folders/1cUMmkY1W850A6KGttYifwhDLDVC5fk0W?usp=sharing
வழிமுறைகள் [Instructions]
குரல் பதிவுகளை அனுப்புவதற்கான வழிமுறைகள்
&
Final Submission Form
பற்றிய தகவல்பெற கீழ்கண்ட பகுதிகளை பயன்படுத்தவும்
தகவல்கள் அறிய Whatsapp Groups [Get More Updates] https://www.kalviradio.com/Groups
நன்றி