Conducted by Tr.Kanchana - Tiruvannamalai DIS
Conducted by Tr.Kanchana - Tiruvannamalai DIS
நோக்கம்
🟪பொது நோக்கங்கள்: மாணவர்களிடையே மகிழ்ச்சியூட்டல், அன்பை வளர்த்தல், உணர்ச்சி வெளியீடு, கவனிக்கும் திறன், நற்குணப் பயிற்சி, வாய்மொழி பயிற்சி போன்றவை உண்டாகின்றன.
🟪சிறப்பு நோக்கங்கள்: மாணவர்களின் அறிவு- பண்பாட்டு வளர்ச்சி, படைப்பாற்றலை வளர்த்தல், நினைவாற்றலும் நடிப்பாற்றலும் வளர்த்தல், கற்பனை ஆற்றலை வளர்த்தல், சொற்களஞ்சிய பெருக்கம், நாட்டுப் பற்றினை வளர்த்தல், போன்றவை இதன் சிறப்பு நோக்கங்களாக அமைகின்றன.
பயன்கள்
🔵மாணவர்கள் கதையைப் படித்து கூறுவதால் வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பழக்க வழக்கங்களை புரிந்து கொள்ள உதவுகிறது
🟢வரலாறு பண்பாடு மற்றும் சமூக மதிப்புகள் போன்றவற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ள உதவுகிறது
🟡தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் கருத்துக்களை வெளிப்படுத்தவும் மற்றும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் வழிவதை செய்கிறது
🔵கதை கூறுதல் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் மற்றும் மகிழ்விக்கும்.
🟢மாணவர்களின் கற்பனை திறனை வளர்க்கும்.
🔴மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க உதவும்.
🟢மாணவர்களிடையே சமூக ஒற்றுமையை வளர்க்க உதவும்.
🟣மாணவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவுகிறது.
🔵கதை கூறுவதால் புதிய பார்வைகளையும் வித்தியாசமான அணுகு முறைகளையும் மாணவர்களுக்கு ஏற்படுகிறது.
🟣மாணவர்கள் வீடியோ பதிவு செய்வதால் அவர்களிடம் ஆர்வம் ஏற்பட்டு தன்னார்வமாக பங்கேற்கின்றனர் (கற்றலில் இனிமை கற்பித்தலில் புதுமை).
🥎மாணவர்களின் வீடியோ பதிவுகளை இணைய பக்கத்தில் பதிவேற்றி வைப்பதன் மூலம் கல்வி அலுவலர்களும் பெற்றோர்களும் எங்கிருந்தும் எப்போதும் கேட்கலாம் மாணவர்களின் வாசித்தல் திறனின் நிலை மேம்பாட்டினை அறியலாம் (ஆவணம்)
🥎மாணவர்கள் தனது செயல்பாட்டை தானே வீடியோவில் பார்க்கும் போது மன மகிழ்ச்சி அடைவர் மேலும் தனது பேச்சில் உள்ள கருத்துப் பிழையை அடையாளம் காண்பவர் (சுயமதிப்பீடு)
வழிமுறைகள்
🔵 மாணவர்களை கட்டாயப்படுத்தாது, அவர்களை தன்னார்வமாக பங்கேற்க மட்டுமே வழிகாட்டப்படுகிறது.
🟢ஆசிரியர்கள் / பெற்றோர்களின் ஒத்துழைப்பு , கண்காணிப்பு அவசியம்.
🟣மாணவர்கள் வீடியோ பதிவு செய்ய விரும்புவதை திட்டமிட்டுக்கொண்டு முதலில் நூலக புத்தகத்தில் உள்ள கதையை நன்றாக படித்து பார்க்கவும்
🟡படித்தபின் அதனை பார்க்காமல் சொல்லிப் பழகவும், பிறகு வீடியோவை பதிவு செய்யவும். மாணவர் கதை கூறுவதை வீடியோ எடுக்கும் போது
🟢மாணவர்கள் வீடியோ பதிவு செய்யும்போது நூலக புத்தகத்தை எடுத்துக்காட்டி புத்தகத்தின் தலைப்பை கூறவும்.
🛑கதைக்கு ஏற்றார் போல் பொம்மைகளையோ சாட் அட்டை படங்களையும் பயன்படுத்திக் கொள்ளவும்.
🛑மாணவர்கள் நிறுத்தி நிதானமாக மற்றவர்கள் கேட்டு புரிந்து கொள்ளும் வகையில் குரல் ஏற்றத்தாழ்வோடு வெளிப்புற சத்தங்கள் இல்லா சூழ்நிலையில் வீடியோவை பதிவு செய்யவும்.
🟣ஒவ்வொரு வீடியோவின் தொடக்கத்திலும் வழிகாட்டி ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள் மாணவனை அறிமுகம் செய்து பேச வேண்டும்.
🏀மாணவர்கள் வணக்கம் என்று தொடங்கி மாணவர் பெயர் வகுப்பு பள்ளியின் பெயர் ஒன்றியம் மாவட்டம் போன்றவற்றை கூறிய பின் தனது கதையின் தலைப்பை சொல்லி கதையை ஆரம்பிக்க வேண்டும்.
🔴இறுதியாக நன்றி கூறி நிறைவு செய்ய வேண்டும்.
நன்றி